இலியானாவின் கொரோனா கால தத்துவம் - Social News
மும்பையில் ஊரடங்கு காலங்களைக் கழித்த நடிகை இலியானா ,சில நாட்களுக்கு முன்பு தன் தாயுடன் சேர்ந்து அமெரிக்காவின் ஹுஸ்டன் நகருக்கு சென்றுள்ளார் . "என் குடும்பமே சிதறிக் கிடக்கிறது என் தந்தை கோவாவில் இருக்கிறார்  சகோதரியோ ஆஸ்திரேலியாவில் , என் தாய் என்னுடன் அமெரிக்காவில் உள்ளார் .கடந்த எட்டு மாதங்களாக என் குடும்பத்தை நான் பார்க்கவே இல்லை என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் மனம் திறந்துள்ளார் .
மேலும், ஊரடங்கு அனுபவங்களை பகிர்ந்துள்ள இலியானா , "இந்த காலம் மிகவும் சிக்கலாக இருந்தது . எனக்கு இது சுவாரசிய ஆண்டாக இருந்தாலும் கூட சற்று சிக்கலாகவும் சிரமஙுகலாகவும் இருந்ததன.

என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

சென்ற ஆண்டில் புகைப்பட கலைஞர் ஆன்ட்ரு நீபோன் நட்பு முறிந்த நிலையில், மும்பையில் இந்த ஊரடங்கு நாட்களை தனிமையில் அவர் கழித்துள்ளார் . "நேர்மையாகச் சொல்வதென்றால் நான் எப்படி இருக்க விரும்புகிறேன் ,ஒரு நபராக என்னை மேம்படுத்துவது எப்படி என்பதை  முதன்முறையாக புரிந்து கொண்டேன். இந்த நான்கைந்து மாதங்களில் ஒன்றை புரிந்து கொண்டேன் . உங்கள் மீது கருணை செலுத்த நீங்கள் மறந்து விடுகிறீர்கள் . உங்களிடம் கருணையுடன் இருப்பது  நீங்கள் சுயநலவாதி என்று அர்த்தமல்ல " என்று ஞானம் பெற்றவராக பேசியிருக்கிறார் இலியானா.

0 Response to "இலியானாவின் கொரோனா கால தத்துவம் - Social News"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel